TOKYO2020:டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கிடம் தோல்வியுற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல்,போர்ச்சுகீசிய வீரர் டியாகோ அப்பலோனியாவை 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 (2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவின் இரண்டாவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

முதல் வீரர்:

ஏனெனில்,நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று,ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக டேபிள் டென்னிஸின் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார் மனிகா பத்ரா.

தோல்வி:

இந்நிலையில்,இன்று காலை நடைபெற்ற ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கை எதிர்கொண்டார்.இறுதியில்,சரத் கமல் 4-1 (11-7 8-11 13-11 11-4 11-4) என்ற கணக்கில் லா மாங்கிடம் தோல்வியுற்றார்.

சீன வீரர் லா மாங் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று நடைபெற்ற,ஆடவர் ஹாக்கியில் நடந்த பூல் ஏ மோதலில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.