நிலவில் பயன்படும் கழிவறை செய்தால் போதும் ரூ.15 லட்சம் பரிசு! நாசா அறிவிப்பு!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு.

நாசா நிலவிற்கு செல்வதற்கான பணிகளை  மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கும், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்த பயணத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிற நிலையில், இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்க இருக்கும் நாசாவின் புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

கடந்த நாட்களில், விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களுக்கு தீர்வு காண நாசா திட்டமிட்டுள்ள நிலையில், மைக்ரோ ஈர்ப்பு விசை மட்டுமின்றி எதிர்காலத்தில் சந்திர லேண்டர் விண்கலத்தில் நிலவின் ஈர்ப்பு விசை சக்தியிலும் பயன்படுத்தக் கூடிய கழிவறையை வடிவமைக்க நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.

இதை வடிவமைத்து அனுப்புபவர்களுக்கு முதல் பரிசாக இந்திய மதிப்பில் 15 லட்சம், இரண்டாம் பரிசு 7 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.