இன்றைய ராசி பலன்கள்.! ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்கள்.!

Today horoscope-மாசி மாதம் 30ந்  தேதி[ மார்ச் 13, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது .பணியில் திறம்பட செயலாற்ற ஒழுங்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும். துணையுடன் ஆன  உறவில் நல் உறவு இருக்காது. பணம் அதிக அளவில் செலவாகும் .ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ரிஷபம் :

இன்று தடைகளும் தாமதங்களும் காணப்படும். இன்று பணியிட சூழல் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  வீட்டுக்காக செலவு செய்ய  நேரலாம் ,ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஓய்வும் அமைதியும் தேவை.

மிதுனம் :

இன்றைய நாள் சீராக இருக்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியில் சுமூகமான நற்பலன்கள் கிடைக்கும், மேலதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள்.  துணையுடன் காதல் உணர்வை வெளிப்படையாக காண்பிப்பீர்கள், புத்திசாலித்தனமாக பணத்தை கையாள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று லாபகரமான நாளாக இருக்கும், புதிய முயற்சிகள் லாபத்தை அளிக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். துணையுடன் நட்பான அணுகுமுறையை கையாள்வீர்கள். போதுமான அளவு பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது ,படபடப்புடன் காணப்படுவீர்கள், புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்கவும். சக பணியாளர்கள்  உடன் மோதல்கள் ஏற்படலாம். உங்கள் தாயுடன் விவாதம் ஏற்படலாம், தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:

இன்று சில அசவுரியங்களை உணர்வீர்கள். நேர்மறையாக எண்ணுவதன் மூலம் சாதிப்பீர்கள் .பணியில் ஏற்படும் தடைகளை தாண்டியும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையை சந்திப்பதை தவிர்க்கவும் .செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்:

இன்றைய நாள் சீராக உள்ளது, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பிரியமானவரை சந்திப்பதன் மூலம் வாழ்வில் நல்ல முடிவு கிடைக்கும். பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று மிகவும் நல்ல நாள். புதிய நண்பர்கள்  ஆதரவை கிடைக்க பெறுவீர்கள். இன்று பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் ,அதிக தண்ணீரை பருகுங்கள்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. மகிழ்ச்சியாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது ,சகா பணியாளர்களுடன் மோதல்கள் காணப்படும். உங்கள் துணையுடன் விவாதங்கள் எழ  வாய்ப்பு உள்ளது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும், இரவில் குறைந்த தூக்கம் காணப்படும்.

மகரம்:

இன்றைய நாள் ஆன்மீக காரியங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம்  ஆறுதல் அளிக்கும். இன்று பொறுமை அவசியம், பணியைப் பொறுத்தவரை சாதகமாக இல்லை. உங்கள் துணையை சந்திப்பதை தவிர்த்தல் நல்லது. இன்று அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

இன்று மிகவும் அனுகூலமான நாள் ,முக்கிய முடிவுகளை எடுக்கலாம் .இன்று பணியில் சிறந்து விளங்குவீர்கள், மேலதிகாரிகளிடம் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். உங்கள் துணையுடன் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிக அளவில் பணம் கிடைக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மீனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயன்களை பெறலாம் .இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் கோபத்தை உங்கள் துணையுடன் காட்டுவீர்கள் .பணத்தை கையாள்வதில் விழிப்புடன் இருக்க வேண்டும். பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment