இன்றைய ராசி பலன்கள் .!ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்கள்.!

Today horoscope-பங்குனி மாதம் எட்டாம் தேதி [மார்ச் 21, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள், சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும் . பணி சூழல் கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்படலாம் ,தாயின் ஆரோக்கியத்திற்காக பல செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். பணியில் திருப்த்தி காண்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையாக பழகுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் ,ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மிதுனம்:

இன்று ஆன்மீகப் பயணங்களுக்கு உகந்த நாள் .நீங்கள் பொறுமையுடன் இருந்தால் நல்லது நடக்கும் .பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். உங்கள் துணையுடன்  வருத்தமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்யலாம்.

கடகம்:

இன்று சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கு சிந்தனை செய்வீர்கள், பணி  சுமை அதிகமாக இருக்கும். சக பணியாளர்களுடன் நல் உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் அமைதியும் கட்டுப்பாடும் தேவை. இன்று அதிக வருமானம் கிடைப்பது கடினம். ஆரோக்கியத்தில்  கவனம் தேவை.

சிம்மம்:

இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். பண இழப்பு காணப்படும். தோல் ஒவ்வாமை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி:

இன்று உற்சாகமான நாள் திட்டமிட்டு முறையாக செய்தால் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக காணப்படும். உங்கள் துணையுடன் நன்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். பணவரவு காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..

துலாம்:

இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் .பணியில் அர்ப்பணிப்பு தேவை. யோசித்து வேலை செய்வது அவசியம். உங்கள் துணையுடன் இனிமையாக பழகுவீர்கள். பண வளர்ச்சி சிறப்பாக காணப்படும்.ஆரோக்யம்  சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு பொறுமையும், நம்பிக்கையும்தேவை . பணியை கவனமுடன் செய்ய வேண்டும் .பணிச்சுமை அதிகமாக காணப்படும் .உங்கள் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் .தேவையற்ற செலவினங்கள் ஏற்படும் .தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம், தூக்கம் பாதிக்கப்படும்.

தனுசு:

இன்று அசௌரியங்களை உணர்வீர்கள், ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை தரும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது .உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். சிறிய கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

இன்றைய நாள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் திறமைகள் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களை விட மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை பற்றி துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள். இன்று திருப்திகரமான பண வரவு இருக்கும். நண்பர்களிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் .முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள் .பணியிடத்தில் சிறந்த அர்ப்பணிப்போடு பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பு முறையை  பகிர்ந்து கொள்வீர்கள் .பண வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகிறது.

மீனம்:

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் .நன்மை தீமை என இரண்டும் கலந்து காணப்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் .உங்கள் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஆன்மீகப் பயணத்திற்காக பண செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.