Today’s Live : இரக்கமில்லாமல் பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த மூதாட்டி..!

பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த மூதாட்டி:

பிரேசிலில் 82 வயது மூதாட்டி ஒருவர் இரவு நேரத்தில் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்திருக்கிறார். நாயின் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்த போதும் ‘இப்படி குரைத்து தொந்தரவு செய்தால் மீண்டும் புதைப்பேன்’ என்று மூதாட்டி கூறியிருக்கிறார்.

neighbor's dog alive

2023-03-13 05:30 PM

திமுகவினர் வெளிநடப்பு :

மக்களவையில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என புகார் தெரிவித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Readmore : அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு!

dmkwalkout
2023-03-13 05:00 PM

உயர்நீதிமன்றம் திட்டவட்டம்:

நீதித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை போலீஸ் பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Readmore : நீதி, வருவாய்த்துறை அதிகாரத்தை போலீஸ் பயன்படுத்த முடியாது – ஐகோர்ட்

2023-03-13 04:30 PM

சம்பள உயர்வு:

டெல்லி முதல்வரின் சம்பளம் 136% உயர்வு, எம்எல்ஏக்களுக்கு 67% ஊதிய உயர்வு.

Readmore : டெல்லி முதல்வரின் சம்பளம் 136% உயர்வு, எம்எல்ஏக்களுக்கு 67% உயர்வு!

2023-03-13 04:00 PM

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:

மும்பையில் மார்ச் 2 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் மருந்து எடுத்துச் செல்லச் சென்ற மைனர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் அவளை கடத்தி, பால்கர் மாவட்டத்தின் விரார் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பை போலீசார் தெரிவித்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை பாந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர்.

2023-03-13 03:20 PM

அவை ஒத்திவைப்பு :

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு கடும் அமளி நிலவியதால் ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

2023-03-13 02:15 PM

நேபாள அதிபர் :

காத்மாண்டுவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேபாள அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்றார்.

Ram Chandra Paudel

2023-03-13 01:30 PM

பிரம்மபுரம் கழிவு ஆலை தீவிபத்து:

திருவனந்தபுரத்தில் பிரம்மபுரம் கழிவு ஆலை தீவிபத்து தொடர்பாக கேரள சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, குற்றச் செயல். இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருகிறோம் என்று லோபி வி.டி.சதீசன் கூறினார்.

2023-03-13 01:00 PM

முகக்கவசம் அணிவது அவசியம் :

தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

masubramanian

2023-03-13 12:00 PM

மக்களவை ஒத்திவைப்பு:

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2023-03-13 11:30 AM

எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம்:

டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Opposition leaders protest

2023-03-13 10:50 AM

ஆம் ஆத்மீ கட்சி போராட்டம் :

டெல்லியில் மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை (ஜேபிசி) அமைக்கக் கோரியும் பிஆர்எஸ் மற்றும் ஆம் ஆத்மீ கட்சி (ஏஏபி) எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

BRS & AAP MPs protest

2023-03-13 10:15 AM
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment