Today’s Live: மதுரை மெட்ரோ ரயில் திட்டம்..! விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்..!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் :

சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வந்த நிலையில் தற்பொழுது மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

29.03.2023 4.45 PM

பறக்கும் படையினர் சோதனை :

கர்நாடகாவில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சேடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் காரில் ரூ.35.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

29.03.2023 3.19 PM

இரு அவைகளும் ஒத்திவைப்பு :

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளின் முழக்கத்தால் இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடும் அமளி காரணமாக 12வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

29.03.2023 2.10 PM

தேர்தலுக்கு தயாராக உள்ளோம் :

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து, மே 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். பாஜக எப்போதும் தயாராக உள்ள கட்சி, நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

29.03.2023 2.02 PM

யூபிஐ பரிவர்த்தனை கட்டணம் :

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று பேடிஎம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 1 முதல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை 1.1% என என்பிசிஐ நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

29.03.2023 1.11 PM

பாஜக எம்பி மருத்துவமனையில் அனுமதி:

புனே பாஜக எம்பி கிரிஷ் பாபட் தீனாநாத் மங்கேஷ்கர், உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் மருத்துவர்கள் ஆலோசனையின் படி, சிகிச்சை பெற்று வருவதாக தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி :

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்பொழுது கர்நாடகா சட்டப்பேரவையின் தேர்தல் வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்

இதையடுத்து தேர்தலுக்கான மனுதாக்கல் ஏப்ரல் 13 அன்றும், மனுதாக்கல் முடிவு ஏப்ரல் 20 அன்றும், வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21 அன்றும், வேட்பு மனு திரும்ப பெரும் நாள் ஏப்ரல் 24 என்றும் அறிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

29.03.2023 12.11 PM

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023:

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இன்று மீண்டும் கூடிய ராஜ்யசபாவும் எதிர்கட்சிகளின் முழக்கத்தால் பிற்பகல் 2 மணிக்கும், மக்களவை 12 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

29.03.2023 11.30 AM

நகைக்கடன் கடன் தள்ளுபடி :

நகைக்கடன் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1,000 கோடியை தமிழ்நாடு அரசு விடுவித்தது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1,000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

29.03.2023 10.15 AM

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment