Today’s Live : நாளை தாக்கலாகிறது 2023-2024 தமிழ்நாடு பட்ஜெட்.!

0
25
Live Today

தமிழ்நாடு பட்ஜெட்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நாளை காலை 10 மணிக்கு 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை அளிக்கிறார்.

TN Budget 2023
TN Budget 2023

2023-03-19 5:55PM

அம்ரித்பால் சிங் வழக்கு :

பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர் பியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2023-03-19 4:44 PM

ரஷ்ய அதிபர் புதின் திடீர் ஆய்வு:

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில், முதல் முறையாக உக்ரைன் எல்லையில் உள்ள மரியுபோல் நகரில் ரஷ்ய அதிபர் புதின் ஆய்வு செய்தார். முன்னதாக, மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-03-19 4:15 PM

அதிமுக வேட்புமனு தாக்கல் நிறைவு:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 3 மணியளவில் நிறைவடைந்தது. இதுவரை, எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை, இந்த தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-03-19 3:50 PM

பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை விளக்கம்:

பாஜக கூட்டணி தொடர்பாக பேச இப்பொழுது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை, அதற்கான நேரம் வரும் போது பேசுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம் உள்ளிட்டவை தொடர்பான எனது கருத்துகளை தலைமையிடம் தெரிவித்துள்ளேன், அதில் நான் உறுதியாக உள்ளேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

2023-03-19 2:20 PM

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு: 

தமிழக தேர்தலில் பணத்தின் செல்வாக்கு தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மாறி வருகிறது, இப்படி தேர்தல் நடத்த முடியாது. பல பணமும், பரிசும் கொடுத்து வாக்காளர்களுக்கு செல்லம் கொடுப்பதால், பத்தாண்டுகளில் தூய்மையான ஆட்சியை கொண்டு வர முடியாத என தமிழக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

2023-03-19 2:10 PM

தேர்தலை நடத்தலாம்:

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதி கூறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு தடை கோரிய வழக்கிற்கு மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

2023-03-19 1:00 PM

இம்ரான் கான் வீடு அடித்து நொறுக்கல்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு விசாரணைக்காக ஆஜராவதால், லாகூரில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து காவல்துறைனர் உள்ளே புகுந்ததால் பரபரப்பு. மேலும், அவரது வீட்டை சேதப்படுத்தி, ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023-03-19 12:35 PM

அதிமுக கட்சி சார்பில் வாதம்:

இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது, இதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த பங்கும் இல்லை. பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது.

2023-03-19 12:29 PM

அக நக

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘அக நக’ பாடலின் Sneak Peak வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவிப்பு.

2023-03-19 12:26 PM

இ.பி.எஸ். தரப்பு வாதம்:

அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர். கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் 2600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 2100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

2023-03-19 11:00 AM

நிதி முறைகேடு :

நிதி முறைகேடு தொடர்பாக விவசாயத் துறை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான செவாலி தேவி சர்மாவை, அசாம் அரசு சஸ்பெண்ட் செய்தது. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) செயல் தலைவர் மற்றும் இயக்குநராக, விதிகளைப் பின்பற்றாமல் ஐந்து வங்கிக் கணக்குகளைத் திறந்தார்.

2023-03-19 10:30 AM