இன்றைய நாளின் (26.01.2023) ராசிபலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எனவே எந்த விஷயம் செய்தாலும் சற்று பொறுமையாக செய்வது அவசியம். நீங்கள் இன்று பணத்தை அதிகமாக செலவு செய்ய நேரிடலாம். எனவே கவனமாகக் கையாள வேண்டும்.

ரிஷபம்: இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்., நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கிய முடிவுகள் இன்று எடுப்பது நல்லது. வேலைகளை கவனமாக மேற்கொண்டால் மேலதிகாரிகளின் ஆதரவு பாராட்டு பெறலாம். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் கடின உழைப்பு செய்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும் . இன்று நீங்கள் சிறப்பாக பணி புரிவீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில முன்னேற்றம் காணப்படும். நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

கடகம்: இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதியை காணலாம். எந்த ஒரு விஷயம் செய்தாலும் அவற்றில் அமைதியான அணுகுமுறை தேவை.இன்று அதிக செலவுகள் காணப்படும். எனவே செலவழிப்பதை பார்த்து செலவழித்தால் நல்ல நாளாக அமையும்.

சிம்மம்: நீங்கள் ஊனமுற்றோர் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்றால் அதற்கு இந்த நாள் சரியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

கன்னி: உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.பணியிடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபித்து காட்டுவீர்கள்.  இன்று நீங்கள் நிறைய பணங்கள் சம்பாதிக்க நல்ல நாள்.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு முழுக்க முழுக்க சந்தோசத்தை.கொடுக்கும் . எனவே, நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி அதற்குரிய அங்கீகாரம் பெற்றுக்கொள்வீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில கவனமாக வேலை செய்யவேண்டும். நீங்கள் விரும்பும் பணம் உங்களுக்கு கிடைக்காது. இதன் காரணமாக கடன் வாங்க கூட நேரலாம்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. எனவே, இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள். எனவே எல்லா விஷயத்திலும் கவனம் தேவை.

மகரம்: உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். உங்களுடைய வேலைகளை முடிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.நிதி நிலைமை பாதுகாப்பாக இருக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

கும்பம்: இன்றய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தரும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்கள் மனநிலை இன்று அமைதியாக இருக்கும்.

மீனம்: இன்று நீங்கள் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். இன்று உங்களுக்கு வேலைகள் நிறைய வரலாம். பணத்தை செலவு செய்தால் சற்று கடினமாக உணர்வீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment