தங்கம் விலை சரிவு.! சவரனுக்கு ரூ.56 குறைவு.!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.35,760க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.35,760க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,470க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.68,400க்கும் விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.