சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த இராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று.

சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த ஞானி இராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர் தான் இராமலிங்க அடிகள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் தனது ஒன்பது வயதிலேயே முருகன் பாடல்களை பாடி பலரது மனதையும் ஆட்கொண்டவர். பசி, பட்டினி, பிணி மற்றும் கல்வி இன்மையால் மக்கள் துன்பத்தை கண்ட இவர் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

1865 ஆம் ஆண்டு இவர் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்து உள்ளார். கடவுள் ஒருவரே, உயிர் பலி கூடாது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது என இவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும் எனவும், பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதே உயர்வான புண்ணியம் எனவும் இவர் தன் வாழ்நாளில் உபதேசித்துள்ளார். மேலும் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய இராமலிங்க அடிகள் 1874 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் மறைந்துள்ளார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal