கவித்தென்றல் அரங்க சீனிவாசன் பிறந்த தினம் இன்று…!

கவித்தென்றல் அரங்க சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர் தான் கவி தென்றல் அரங்க சீனிவாசன். இவரது தாயார் மங்கம்மாள் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை என கூறப்படுகிறது.

மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்த சீனிவாசன், ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியமாக இந்த நூலை எழுதியுள்ளார். மேலும் இவர் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவை கவிஞராகவும் இருந்துள்ளார்.

மேலும் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக உறுதுணையாக இருந்த இவர், வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், வழிகாட்டும் வான்சுடர், சுதந்திரப் போரின் எழுச்சிக் களம், அகமும் புறமும், தாகூர் அஞ்சலி, சுயசரிதை நூல், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவர் ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி எனவும் போற்றப்படுகிறார். இவர் தனது 76 ஆவது வயதில் 1996 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal