அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான இன்று அவரது 10 சிறந்த கருத்துக்கள் அறியலாம் வாருங்கள் ..!

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர் தான் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், இந்து மத எதிர்ப்பையும் ஆழமாக வலியுறுத்தியிருந்தார்.

மேலும் பொருளாதார நிபுணராகவும், வழக்கறிஞராகவும் பன்முகத்திறமை கொண்டு சிறந்த முதல்வராக இருந்தவர் அம்பேத்கர். இவரது 132வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது 10 உத்வேகமான கருத்துக்களை நாம் பார்க்கலாம்.

  • தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மன நோயாளி.
  • நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில், அச்சமூகத்தின் சாபக்கேடு நீ தான்.
  • சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
  • சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.
  • குழந்தை பேறு சமயத்தில் பெண்கள் படவேண்டிய வேதனைகளை ஆண்கள் படவேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு குழந்தைக்கு மேல் பெற இணங்க மாட்டார்கள்.
  • கடவுளுக்கு தரும் காணிக்கையயை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
  • ஒரு ஆண் கல்விப்பெற்றால் ஒரு குடும்பம் முன்னேறும், ஒரு பெண் கல்வி பெற்றால் ஒரு தேசமே முன்னேறும்.
  • ஓர் அடிமை அவன் அடிமை என்பதை உணர்ந்த பின் தானாகவே கிளர்ந்து எழுவான்.
  • மற்றவர்களின் எல்லாத்தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் நல்லவன் எனும் பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் உனக்கு வேண்டாம்.
  • சுய மரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம், அதை இழந்து வாழ்வது பெரிய அவமானம்.
author avatar
Rebekal