இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு  இன்று  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை (நவம்பர் 2ம் தேதி) கல்லறை திருநாள் என இரண்டு நாட்களும் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதுச்சேரியின் விடுதலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளும் செய்யப்படும் ‘கல்லறை திருநாள்’ நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி புதுச்சேரியில் தொடர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.