,

இந்த மாவட்டத்துக்கு மட்டும் இன்று, நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

By

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதனையடுத்து, இன்று தேர்த்திருவிழா காலை நடைபெறவுள்ளது. எனவே பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள் கூட்டம் அலைமோதும் என்பதற்காக தேர்த்திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு காவல்துறை, திருச்சி மாவட்ட காவல்துறையின் முன்னேற்பாடுகள் மிக அருமையாக செய்துள்ளானர்.

இந்நிலையில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு  திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறை அறிவிப்பு தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக முறையை ஏப்ரல் 29, மே 13 ஆகிய தேதிகளில் பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023