மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி..? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்த அசத்தலான திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த இந்த மடிக்கணினி திடீரென கடந்த 2019 ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஏனென்றால், கொரோனா பரவல் காலகட்டத்தில் மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டென்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டதா..? என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், இந்த திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை.அரசு பள்ளிகளில் அதிக சலுகைகள் கிடைப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment