இன்றைய (16.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்றைய செயல்கள் சமூகமாக நடக்கும். நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். அவர்களுடன் சேர்ந்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்: இன்று சிறப்பான நாளாக அமையாது .சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இன்றி இருப்பீர்கள்.பொறுமை அவசியம். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும்.

கடகம் : இன்று உங்கள் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமான நாள். உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரும் நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்: இன்றைய நாள் சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. பிறருடன் பேசும் போது யோசித்து கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும்.

கன்னி: இன்று பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். இதனால் உங்களுக்கு வருத்தம் உண்டாகும்.

துலாம்: இன்றைய நாள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.எதிர்மறை எண்ணங்களை விலக்க நீங்கள் சமயோஜித புத்தியை பயன்படுத்த வேண்டும்.

விருச்சிகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

தனுசு: இன்று சிறப்பான நாள். சிறிய முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புதிய முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் சமூகமான நிலை காணப்படும்.

மகரம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது. இன்று உங்களை உற்சாகமாக வைத்துக் கொண்டு மற்றவரையும் மகிழ்விக்க வேண்டும். எது வந்தபோதிலும் சமநிலையோடு ஏற்றுக்க்கொள்ளுங்கள்.

கும்பம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் நலத்தை மேம்படுத்த இது உகந்ததல்ல. பணியிடத்தில் சிறப்பான பலன்கள் காணப்படாது.

மீனம்: இன்று நன்மையான பலன்கள் நடக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும். உங்களிடம் காணப்படும் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக வெற்றிகரமான பலன்கள் கண்டு பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.