இன்றைய (03.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

உங்களை மகிழ்ச்சியாக வைத்திக்க பாடல்கள் கேட்பதன் மூலம் திருப்தியான மனநிலை காணப்படலாம். உங்கள் கோபத்தை பிறரிடம் காட்டாதீர்கள்.

ரிஷபம்:

இன்று பொறுமையுடன்; இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். முடிந்த அளவு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

மிதுனம்:

உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறை கூடாது. விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக நாட்டமும் ஈடுபாடும் உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்.

கடகம் :

உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் மிகவும் சிந்திப்பீர்கள். இது எல்லாரிடத்திலும் இருப்பது இயல்பு. மிகவும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க சிறந்த நாள்.

சிம்மம்:

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் சாதாரண செயல்கள் இன்று உத்வேகம்அளிக்கும். நீங்கள் பெரிதாக சாதித்ததைப் போன்று உணர்வீர்கள்.

கன்னி:

இன்று சாந்தமாக இருப்பது நல்லது. உங்கள் சபலங்களை இன்று கட்டுப்படுத்த வேண்டும். பணியில் இன்னும் நல்ல கவனம் செலுத்த வேண்டும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க அது உதவும்.

துலாம்:

இன்று வெளியே சென்றால் மகிழிச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு இது இன்று அவசியம் தேவை. இன்று முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்:

இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். உங்கள் இணக்கமான தொடர்பாடல் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களிடம் காணப்படும் உறுதி உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

தனுசு:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்று மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

மகரம்:

இன்று உங்களுக்கு தேவை தைரியம். கஷ்டகாலங்கள் கடந்து போகும் நல்ல நாட்கள் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

கும்பம்:

இன்று குறைந்த அளவு நற்பலன்களே கிடைக்கும். வெற்றிக்கு முடிந்த அளவு முயலுங்கள். எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்:

இன்று சிறப்புடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் அணுகுமுறையில் கவனத்துடன் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் வளர்சியைத் தரும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.