மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது… முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு… அரசிதழில் வெளியீடு..

நடப்பு 2021 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும்  பணி தொடர்பாக தமிழக அரசு, தற்போது  அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல்  செப்டம்பர் மாதம்  30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தில் கணக்கெடுப்பு,  ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பு முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புபணி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கையை  கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.அதில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்களை தமிழக அரசு, அரசிதழில்  வெளியீட்டுள்ளது. இதை மத்திய அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் வௌியிட்ட அறிவிப்பையொட்டி, தமிழக அரசு தற்போது  இந்த அறிவிப்பை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj