திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment