,

புதிய வாகனம் வாங்கப் போகிறீர்களா? இதோ.. உங்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்!

By

புதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • நாம் வாங்கிய புதிய பைக்கில் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். 1000 கிலோமீட்டரை கடந்த பின்னர், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை இயக்குங்கள்.
  • குறைந்த கியரில் அதிக வேகத்தில் செல்வதோ, டாப் கியரில் குறைந்த வேகத்தில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அது, பைக்கில் என்ஜினை பாதிக்க நேரிடும்.
  • சடன் பிரேக் பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவும். அதேபோல அதிவேகமாக செல்வதையும் தவிர்க்கவும்.
  • மழை காலத்தில் சேறு, சகதி போன்றவை என்ஜின் மீது படியும். குறைந்த சிசி என்ஜின்கள் அனைத்தும் காற்றினால் குளிரவைக்கப்படுவதால், என்ஜினை மறைக்கும் வகையில் டூம், பிளாஸ்டிக் பொருட்களை பொருத்துவதை தவிர்க்கவும்.
  • அதேபோல, முதல் சர்விசை ஷோரூமில் விட்டு, கிலோமீட்டர் செய்வது நல்லது. மேலும், குறிப்பிட்ட கிலோமீட்டர் கணக்கில் சர்வீஸ் செய்வதை தவறினால் மைலேஜ் மற்றும் என்ஜினின் ஆயுள் குறைய வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி, அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் சர்விஸ் செய்வது நல்லதாகும்.
  • நமது பைக், நமது பழக்கத்திலே தொடர்ந்து இயக்கினால் மிகவும் அருமையாக இருக்கும். அதே நமது பைக்கை வேறு ஒருவர் ஓட்டக்கொடுத்தால், அது வித்தியாசமாக இருக்கும். இது பலருக்கும் நன்றாக தெரியும். அதனால் பைக்கை கொடுத்தால், விரைவில் வாங்கிக்கொள்வது நல்லது.

மேற்கண்ட அனைத்து டிப்ஸ்-ஐ நாம் செய்தால், நமது பைக்குடன் நீண்ட நாட்களாக பயணம் செய்யலாம்.

Dinasuvadu Media @2023