திருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்!

கார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் பெரியளவில் பேசப்படும் மகா தீப தரிசனம் இன்று மாலை நடந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் 2,668 அடி உயர மகா தீபமும் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வெளி மாவட்ட பக்தர்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.