அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழைப் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு, தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மழைப்பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

வானிலை மையம் தகவலின்படி, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அதே போல, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.