எவ்வித பாதிப்பு இல்லாமால் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.!

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1,515  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 48,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,438 பேர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும்  49 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 3 பேர் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் இப்போது வரை எந்தவித அறிகுறியும் 55 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.