தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனிவரும் காலங்களில் உயிரிழக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ்  பாதிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகிறது.

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றான ஓமைக்ரான் தொற்றும் அங்கு பரவி வருகிறது. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிவரும் குளிர்காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துக் கொண்டால்தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும், நாம் நமது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.