இன்று முதல் கொல்கத்தா விமான நிலையத்தில் இந்த மாநில விமானத்திற்கு அனுமதி இல்லை.!

கொல்கத்தா விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூரிலிருந்து நாளை முதல் ஜூலை 19 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் மற்ற மாவட்டத்துடன் குறையாவாக 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் எட்டாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் டெல்லி, மும்பை, சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூரிலிருந்து நாளை முதல் ஜூலை 19 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை விமானங்களுக்கு தடை அறிக்கை வெளிட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.