அந்த தோல்வி படத்தில் நடிக்க காரணமே இது தான்! சந்தானம் பட நடிகை குமுறல்!

தடம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு இவருக்கு தமிழில் சந்தானத்திற்கு ஜோடியாக கிக் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கிக் படத்தில் நாம் நடித்தால் நன்றாக இருக்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என யோசித்து இந்த படத்தில் நடித்தாராம்.

ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். சந்தானமும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து தான் காத்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை காமெடி கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அடி வாங்கியது.

ரொம்ப பாவம்! மன வருத்தத்தில் ‘குட்டி ஜானு’… காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்த காரணத்தை பற்றி நடிகை தன்யா ஹோப் பேசி உள்ளார். இது குறித்து பேசிய தன்யா ஹோப் ” எனக்கு பட வாய்ப்புகள் வராத சமயத்தில் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் எனக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் கொண்ட  படங்களில் நடிக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அப்படி எதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்பினேன். படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்தும் இருந்தது. எனவே, இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் நமக்கு அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நடித்தேன்.

படம் வெளியாகி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் படத்தின் படப்பிடிப்பின் போது கோவை சரளா போன்ற பெரிய பிரபலங்களுடன் பேசும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட்டுக்கொள்கிறேன். அவர் எனக்கு அட்வைஸ் செய்த விஷயங்கள் எல்லாம் என்னுடைய மனதில் அப்படியே இருக்கிறது” எனவும் நடிகை தன்யா ஹோப் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.