இதுதான் பாஜகவின் நாடாளுமன்ற மரபு! – சு.வெங்கடேசன் எம்.பி

நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்குள் இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்றும் மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14  பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், தனது எக்ஸ் வலைதளப்பாக்கத்தில், ‘பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!

அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.