ஏடிஎம் கொள்ளையர்கள்கைது.! திருவண்ணாமலை காவல் நிலையத்தில் ஐஜி விசாரணை.! மற்றவர்களுக்கு வலைவீச்சு.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர். அவர்களை ஹரியானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர்.

ஐஜி விசாரணை : ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப்  மற்றும் ஆசாத் ஆகிய இருவரும் தற்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டுள்ளனர். அங்கு வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றவர்களுக்கு வலைவீச்சு : இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை வளையத்திற்க்குள் குஜராத்தை சேர்ந்த 6 பேரும், பெங்களூருவில் 2 பேரும் இருக்கின்றனர் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment