வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் இவர்கள் தான்!

நோபல் பரிசானது உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதானது, 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதானது விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் , அமைதி, வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  வேதியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் தூத்னா ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.