காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா?

காலை எழுந்ததும் ஒவ்வொருவரும் கட்டாயம் நீர்ச்சத்து நிறைந்த பானத்தை பருகுதல் மிகவும் அவசியம்; ஏனெனில் இரவு முழுதும் 7-9 மணி நேரங்கள் நீரின்றி ஓய்வெடுக்காமல் தூக்கத்திலும் இயங்கி கொண்டிருந்த உடல், காலையில் நன்முறையில் இயங்க அதற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகையால் காலை எழுந்ததும் நீர்ச்சத்து கொண்ட பானத்தை பருகுதல் வேண்டும்.

இந்த பதிப்பில் காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 7 பானங்கள் என்னென்ன என்று படித்து அறிவோம்.

நீர்

காலை எழுந்ததும் 1 குவளை நீரை பருகினால், அது உடலுக்கு புத்துணர்வு அளித்து, உடலில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலுமாக வெளியேற்ற உதவும்.

பொதுவாக காலை எழுந்ததும் முடிந்த அளவு நீர் அருந்தி விட்டு எந்த செயலையும் செய்ய தொடங்குவது நல்லது.

எலுமிச்சை சாறு

வெறும் நீரை காலையில் பருக இஷ்டம் இல்லாத நபர்கள், நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனை பருகலாம். இது உடலுக்கு புத்துணர்வு அளித்து தூய்மைப்படுத்துவதோடு, உடலின் எடையை சமநிலைப்படுத்தவும் உதவும்.

காய்கறி சாறு

கேரட், பச்சைக் காய்கறி, கீரை, பீட்ரூட் போன்றவை கலந்து காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சாறினை காலையில் பருகுவது, உடலின் இயக்கத்திற்கு மிகவும் நல்லது.

அருகம்புல் சாறு

காலையில் அருகம்புல் சாறு அருந்தி உடல் பயிற்சி மேற்கொண்டு வந்தால், உடலை எந்த ஒரு நோய் நொடியும் அண்டாது என கூறப்படுகிறது; இதை நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.

இளநீர்

காலையில் சாதாரண தண்ணீரை பருக விருப்பமில்லாத நபர்கள் இளநீரை பருகலாம்; இது உடலுக்கு சக்தியை அளித்து, உடலை சுத்தப்படுத்த உதவும்.

இஞ்சி தேநீர்

இஞ்சி கலந்த தேநீரை காலையில் பருகி வருதல் உடலுக்கு அதிக சுறுசுறுப்பு தன்மையை வழங்கும்; மேலும் உடலின் களைப்பை, சோர்வை விலக்கும்.

ஆரஞ்சு சாறு

சிட்ரஸ் சத்து கொண்ட ஆரஞ்சு சாறினை பருகி வருதல் உடலுக்கு புத்துணர்வு அளித்து, உடலின் அமில சமநிலையை காக்கும்.

பெர்ரி ஸ்மூத்தி

பிடித்த வகை பெர்ரி பழங்களை கொண்டு ஸ்மூத்தி வகை பானம் தயாரித்து கூட பருகி வரலாம்; இது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக அளிக்கும்.

இந்த பதிப்பில் கூறப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை – உங்களுக்கு பிடித்ததை தினந்தோறும் காலை எழுந்ததும் பருகி வந்தால், உடல் எந்த ஒரு நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

author avatar
Soundarya

Leave a Comment