கடைசி டி20 :யாருக்கு டி20 தொடர்..! வெறிகொண்டு பழிதீர்க்க காத்திருக்கும் நியூ..,பந்தாட துடிக்கும் இந்தியா..!

14

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே டி20 தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆனது ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

Related image

இந்த ஹாமில்டனில் தான் இந்திய அணி 4 வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஆளாகி நியூசிலாந்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ரன்னில் படு மோசமாக சுருண்டதை இந்திய கிரிக்கெட் வட்டாரம் யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் இன்று இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் படு கவனமுடன் ஆட வேண்டியது மிக அவசியமாகும்.

Image result for ind vs nz t20 images

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் அதிரடி பேட்ஸ்மேன்களுக்க அங்கு  பஞ்சமில்லை. மேலும் அந்த அணி பந்து வீச்சிலும் நல்ல நிலையில் தான் உள்ளது. ஆனால் அந்த அணி ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் தான் சீரான போக்கு இல்லை. இது தான் அவர்களின் பலவீனமும் கூட அந்த அணி ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில் தற்போது 20 ஓவர் தொடரை வென்று இந்தியாவை  பழிதீர்க்கும் வேட்கையுடன்  அணி வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

Related image

கடைசி டி20 களமிறங்கும் அணி வீரர்கள் :

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், குருணல் பாண்ட்யா, கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் டெய்லர், டேரில் மிட்செல், சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.

இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.