தமிழகத்தில் குளு குளு.. பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கோடை மழை.! இன்று 12 மாவட்டங்களில் மழை.!

தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. 

தமிழகத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.

நேற்று, கடலூர், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரு சில இடங்களிலும் நாளை ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை மழை ஒரு பக்கம் பொழிந்தாலும், கடும் கோடை வெயில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயிலின் தாக்கம் இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.