10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. ஆனால், இந்த போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நேரம் முன்பு இந்த போட்டியில் கண்டிப்பாக 90% வரை மழை பெய்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்ததுள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல ஐபிஎல் போட்டிகள் 7 மணிக்கு டாஸ் போட பட்டு 7.30 மணிக்கு தொடங்கிவிடும், ஒரு வேளை மழையால் டாஸ் தாமதம் ஆனால் 7.15 மணிக்குள் டாஸ் போட்டு 7.30 மணிக்கு போட்டியை தொடங்குவதற்கு பார்ப்பார்கள். ஒரு வேளை மழை நீடித்தால் 8.40 மணி வரை போட்டியில் எந்த ஒரு ஓவரும் குறைக்கமால் முழுமையாக போட்டி நடத்தப்படும். அது ஏன் 8.40 மணி வரை என்றால் ஒரு இன்னிங்ஸ்க்கு ஐபிஎல் நிர்வாகம் ஒதுக்கிய நேரம் என்பது 1 மணி நேரம் 10 நிமிடம் அந்த கணக்கு தான் இந்த 8.40 மணி.

ஒரு வேளை 8.40 மணியையும் தாண்டி மழை நீடித்தால் 4 நிமிடம் 15 நொடிகளுக்கு ஒரு முறை ஒரு ஒரு ஓவராக குறைத்து கொண்டே வருவார்கள். உதாரணமாக 8.45 மணிக்கு போட்டி தொடங்கபட்டால் 5 ஓவர்களை குறைத்து 15 ஓவர்களாக போட்டி நடைபெறும். மேலும், அதை தாண்டி மழை குறையாமல் 10.57 மணியையும் வரை எந்த ஒரு மாற்றமும் இன்றி மழையால் போட்டி நடத்த முடியாமல் போனால் அந்த போட்டியை கைவிட்டு விடுவார்கள் அதாவது போட்டி நடைபெறாது.

ஒரு வேளை 10 மணி அளவில் மழை நின்று போட்டிக்கான ஏற்படுகளை செய்து 10.57 மணிக்கு போட்டி போட்டி தொடங்கினாள் அந்த போட்டி 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவார்கள். முடிந்த அளவிற்கு போட்டியை நடத்துவதற்கே ஐபிஎல் நிர்வாகம் முற்படுவார்கள். இதை எல்லாம் தாண்டி போட்டியை நடத்த முடியவில்லை என்றால் மட்டுமே போட்டியை கைவிடுவார்கள். அதனால் மலை பெய்தாலும் 10.57 மணி வரை சமயம் இருப்பதால் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் 2 அணியின் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

RELATED ARTICLES