ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை- அமெரிக்கா

ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

யுஎஃப்ஒ(UFO- Unidentified Flying Object) எனும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்த அறிக்கைகளை விசாரிப்பதற்காக அமெரிக்காவின் பென்டகன் எடுத்த முயற்சியில், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்ததாகவோ அல்லது இங்கு விபத்துக்குள்ளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம், ஜூன் 2021 இல் வெளியிட்ட அறிக்கையில் 2004 மற்றும் 2021 க்கு இடையில், 144 யுஎஃப்ஒக்கள்(அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்) கண்டறியப்பட்டதாகவும் அவற்றுள் சென்சார்கள் மூலம் 80 யுஎஃப்ஒக்கள் படம் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

அவர்கள் மேலும் கூறியதாவது, இதுவரை நாங்கள் எந்த வேற்றுகிரக வாசிகளையும் பார்க்கவில்லை, இதனை கூறுவதற்கு நாங்கள் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம், இது குறித்து இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் பென்டகனில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபிஸின் (AARO) இயக்குனர் சான் கிர்க்பாட்ரிக், இது குறித்து கூறும்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது – வேற்று கிரக வாழ்க்கையின் சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை மற்றும் ஆராய்ச்சிக்கு அறிவியல் சார்ந்த ஆதாரத்தை சேகரித்து வருவதாகக் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment