இன்னும் சில மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.! வானிலை மையம் தகவல்.!

அடுத்த ஓரிரு மணிநேரங்களில்  தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இனி வரும் மழையையும் எதிர்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஓரிரு மணிநேரங்களில்  தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment