கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலை மதன் கார்க்கி எழுத விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதாவது 1 நாளில் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அது என்ன சாதனை என்றால் தென்னிந்திய சினிமாவில் வெளியான 1 நாளில் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்த லீரிக்கள் பாடல் என்ற சாதனையை தான். விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதைப்போல 1.2 மில்லியன் லைக்குகளையும் வாங்கி இருக்கிறது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்று இருந்த அரபிகுத்து பாடல் வெளியான 1 நாளில் 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த பாடலின் சாதனையை கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் முறியடித்துள்ளது.

இந்த விசில் போடு பாடல் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட  இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் (South India’s most viewed lyrical video songs) 

  • விசில் போடு – 24.88 மில்லியன்
  • அரபி குத்து – 24 மில்லியன்
  • டம்மசாலா- 17 மில்லியன்
  • ரஞ்சிதமே – 16.68 மில்லியன்
  • நா ரெடி தான் – 16.54 மில்லியன்
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

2 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

9 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

15 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

16 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

18 hours ago