பெங்களூரு ஏரிகளில் உள்ள தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியற்றவை

பெங்களூரு ஏரிகளில் உள்ள தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியற்றது-KSPCB அறிக்கை.

கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (KSPCB) நீர் தர பகுப்பாய்வு அறிக்கையின்படி, பெங்களூருவில் உள்ள 105 ஏரிகளில், ஒரு ஏரி கூட குடிநீர் ஆதாரமாக இல்லை.

ஏரிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணம், பெங்களுருவில் உற்பத்தியாகும் கழிவுகளில் 80 சதவீத கழிவுநீர் மற்றும் 20 சதவீத தொழிற்சாலை கழிவுகள் ஏரிகளில் கலப்பதால் தான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீரை எடுத்துச் செல்லும் வடிகால் நீர்நிலைகளில் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த நடவடிக்கைகள் மார்ச் 31, 2023 க்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கூறப்பட்டுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment