இந்தியா – சீனா எல்லை பிரச்னையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.! – அமெரிக்கா தகவல்.!

இந்தியா – சீனா என இரு தரப்பும் விரைவில் எல்லை பிரச்சனைகளில் இருந்து விலகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். – அமெரிக்க வெள்ளை மாளிகை.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லை வழியாக சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து, அமெரிக்க பாதுகாப்பு துறை தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, எல்லை பிரச்னை நிலமையை கட்டுப்படுத்த இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதையும், இந்தியா – சீனா எல்லை வழியாக சீனா ராணுவ உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் நாங்கள் காண்கிறோம். என அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்த தகவல் என்னவென்றால், இந்தியா – சீனா என இரு தரப்பும் விரைவில் எல்லை பிரச்சனைகளில் இருந்து விலகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment