விக்ரம் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த “கோப்ரா” படக்குழு.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத விதமாக பல வித்தியாசமான கெட்டப்களில் இந்த படத்தில் விக்ரம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது பலத்த எதிர்பார்புகள் உள்ளது.

கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றே போனது. அதன்பிறகு ஒருவழியாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 11-ஆம் தேதி சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment