எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது – கடம்பூர் ராஜூ

எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து  வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்றும் மதத்தை புண்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என   கூறியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.