எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அமைப்பு!

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என விவசாயிகள் அமைப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பின் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். பின்பதாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும், அதற்கு முன்பதாக நாங்கள் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாக மாறி விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal