கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோமா.?! சிங்கப்பூர் அரசு அதிரடி விளக்கம்…

யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும்  நடைமுறை சிங்கப்பூர் அரசுக்கு இல்லை. அதன்படி, கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை – சிங்கப்பூர் அரசு விளக்கம்.

இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதை தொடர்ந்து இலங்கையில் இருந்து திடீரென காணாமல் போனார் அதிபர் ராஜபக்சே.

அவர் இலங்கையில் இருந்து தப்பித்து மாலத்தீவில் இருந்தாததாகவும்,  அதன் பின்னர் அங்கிருக்கு சிங்கப்பூர் சென்றதாகவும், சிங்கப்பூர் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது சிங்கப்பூர் அரசு. அந்நாட்டு செய்தி குறிப்பின் படி, இலங்கை அதிபர் ராஜபக்சே சொந்த காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். சொந்த காரணங்களுக்காக யார் வேண்டுமானாலும், சிங்கப்பூர் வரலாம்.

யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும்  நடைமுறை சிங்கப்பூர் அரசுக்கு இல்லை. ஆகவே, கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை, ஆனால் அவர் சிங்கப்பூரில் தான் இருக்கிறார் என்பதை தெளிவு படுத்தியுள்ளது சிங்கப்பூர் அரசு.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment