Venus Motorcycle: படப்பிடிப்பு இப்போ தான் தொடங்கியது! அதுக்குள்ள ‘பைக் டூர்’ அறிவிப்பு வெளியியீடு!

பிரம்மாண்ட சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகர் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில், பைக் டூர் மற்றும் அஜித்தின் புதிய நிறுவனம் தொடங்கியது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித் தற்போது “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, துணிவு படம் ரிலீஸுக்கு பின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகி இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது. காரணாம், அஜித் தனது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடு பைக் பயணத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால், படிப்பிடிப்பு தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, படக்குழு படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது. இப்படி இருக்கையில், செப்டம்பர் 28ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள கடித்ததை நேற்று லியோ ட்ரைலர் வெளியான சமயத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, தனது புதிய நிறுவனத்திற்கு ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலக சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு பாதுகாப்பாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இப்போதைக்கு ராஜஸ்தான், அரபு நாடுகள் (யுஏஇ), ஓமன், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டுள்ளனர். “இந்த சுற்றுப்பயணம் இங்கிருந்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லும் பாதைகள் மற்றும் இடையில் நாம் தங்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கி 3 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் பைக் டூர் அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகிறார்கள். அவ்ளோ தான் இனிமேல் பைக் ரைட் பக்கம் சென்று விடுவார், விடாமுயற்சி படம் எடுத்த மாதிரி தான் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அஜித் தனது நிறுவனத்தை ப்ரோமஷன் செய்ய தான் இத்தனை நாள் பைக் ரைட் செய்ததாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.