நிலக்கரி சுரங்கம் ரத்து.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகள்.!

நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

தமிழகத்தில் வேளாண் மண்டலங்களான காவேரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மதினாஅரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான டெண்டர் கோரி அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் எதிர்ப்பு :

விவசாய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழகத்தில் விவசாய சங்கங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேளாண் மண்டலம் நீக்கம் :

இதனை தொடர்ந்து, தமிழகஅரசு மத்திய அரசுக்கு , தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட கோரி வலியுறுத்தியது. இதனை ஒட்டி, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையில் இருந்து தமிழக வேளாண் மண்டலம் நீக்கப்பட்டது.

முதல்வருக்கு நன்றி :

காவேரி வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை , விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

RELATED ARTICLES