குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு காரணம் அரசியல் தான் -விஜயசாந்தி விளக்கம் .!

  • குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும்.
  • அரசியலுக்கு வந்த பிறகு சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும் எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன் என கூறினார்.

நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு ஆகிய  இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர்  அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மகேஷ்பாபு நடித்துள்ள ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மகேஸ்பாபுவிற்கு அம்மாவாக நடித்துள்ளார்.

விஜயசாந்தி 13 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , என்னை இப்படத்தில் நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்பு வந்தது. ஆனாலும் நல்ல கதை இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்.

தற்போது மகேஷ்பாபு நடித்த இந்த படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். அரசியல் தான் எனக்கு முக்கியம் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன் என கூறினார்.

மேலும் குழந்தை எனக்கு பிடிக்கும் ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும் அரசியலுக்கு வந்த பிறகு சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும் எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன்.

இதை என் கணவரிடம் சொன்னேன் அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவுக்கும் குழந்தை ,குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தவர் என கூறினார்.

author avatar
murugan