#Breaking : புதுசேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு.!

இன்று புதுசேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆளுநர் உரை முடிந்ததும் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நேற்று டெல்லி சென்ற புதுசேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அதில், புதுசேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று நடந்த புதுசேரி சட்டப்பேரவையில், ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தமிழில் உரையாற்றினார்.  மத்திய அரசிடம் இருந்து, நிதியை முறையாக பெற்று தரவில்லை, என சில காரணங்கள் கூறி ஆளும் அரசை கண்டித்து,

திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆளுநர் உரை முடிந்ததுமே, பட்ஜெட் தாக்கல் செய்யாமலே, அடுத்து  உடனே, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்துவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment