பெட்ரோல் விலை உயர்வை கண்டு இரானில் பயங்கரம்..!!

இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்துள்ளது.அடுத்தாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இதனால் அந்நாட்டில் போராட்டம் . கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல் விலையானது குறைந்தபட்சமாக 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையினால் இரான் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் கிடங்குகலில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் மோசமாக மாறிவிட்டது என கூறுகின்றன.நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திய படிபோராட்டக்காரர்கள் மத்திய இரானில் உள்ள பெட்ரோல் கிடங்குகள் தாக்கப்பட்டதாக இரான் அரசு கூறியுள்ளது.மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் தாக்கப்பட்டதாகவும் மத்திய இரானில் உள்ள சிர்ஜான் மாகாணத்தின் ஆளுநர் கூறியதாக சொல்லப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.