குடியரசு தலைவர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் !!!!

  • கடந்த 11-ம் தேதி  முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் 1 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.
  • மற்றவர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.
  • மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு  பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டு 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருது பட்டியல் கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி  முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் 1 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.
மற்றவர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு  பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.மேலும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோர்  பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
விண்வெளி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக விண்வெளி விஞ்ஞானி நம்பிராஜன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் நம்பிராஜனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
author avatar
murugan

Leave a Comment