தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை ஆப்பிளில் அட்டகாசமாக வரைந்த ஓவியர்…! புகைப்படம் உள்ளே..!

தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை ஆப்பிளில் அட்டகாசமாக வரைந்த ஓவியர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றார்.

இதனால், ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. .இந்நிலையில், இவருக்கு பரிசு மழை குவிந்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி என்பவர் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை, அட்டகாசமான  முறையில், ஆப்பிளில் ஓவியமாக வரைந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.