கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது.

இன்று ஒரே நாளில் கேரளாவில் 449  பேருக்கு கொரோனா உறுதி. இதனால் கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது.

கேரளாவில் தினமும் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில்  கேரளாவில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,323 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 4,259 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று 2 இறப்புகள் பதிவாகியுள்ளன நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இறப்பு விகிதம் 0.39% ஆகும், இது மற்ற மாநிலங்களை விட குறைவு என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.